Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி: கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

திருப்பதி: கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

-

- Advertisement -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி ஒன்று முதல் 11 ஆம் தேதி வரை சிறப்பு தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் கொரோனா தடுப்பூசி சான்று அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதல் சமர்பிக்க வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 1 ம் தேதி புத்தாண்டு மற்றும் 2ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 11 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்கள் என 2 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்கள் காலை 9 மணிக்கு ₹ 300 சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படப்பட்டது. ஆன்லைனில் வெளியான 30 நிமிடங்களில் 2 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டனர். இது தவிர திருப்பதியில் 9 இடங்களில் வைகுண்ட ஏகாதேசிக்கான 10 நாட்களுக்கு உண்டான இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் 1ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

we-r-hiring

ஒரு நாளைக்கு 50,000 டிக்கெட்டுகள் வழங்கக்கூடிய நிலையில் முதலில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து டிக்கெட் வழங்கப்பட உள்ளது. ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். டிக்கட் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்பட்டாலும் சுவாமி தரிசனத்திற்கு எக்காரணத்திற்கு கொண்டும் அனுமதிக்க முடியாது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ