spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"இலவச சலுகை எனக்கும் பொருந்தும்" என நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்!

“இலவச சலுகை எனக்கும் பொருந்தும்” என நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்!

-

- Advertisement -

 

"இலவச சலுகை எனக்கும் பொருந்தும்" என நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்!
Video Crop Image

கட்டணமின்றிப் பயணிக்க தன்னையும் அனுமதிக்க வேண்டும் என கர்நாடகா அரசுப் பேருந்தில் வடமாநில பெண் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

we-r-hiring

மணிப்பூருக்கு செல்லும் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள்!

கர்நாடகா மாநிலத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டத்தில் பயன்பெற பெண்கள் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவோ, அங்கு வசிக்கும் முகவரி ஆதாரத்தைக் கொண்டவர்களாகவோ இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நிரூபிக்க அடையாள அட்டை ஆவணத்தைக் காட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பெங்களூருவில் அரசு பேருந்தில் ஏறினார். அப்போது நடத்துனர் பயணச்சீட்டு வாங்கக் கூறியதால், அவருடன் அந்த பெண் வாக்குவாத்தில் ஈடுபட்டார். தான் மத்திய அரசு ஊழியர் என்றும், பெங்களூருவில் தங்கியிருப்பதாகவும் கூறி, அதற்கான ஆதாரத்தை அந்த பெண் காட்டினார்.

மணிப்பூர் கொடூரம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை!

எனினும், நடத்துனர் அதனை ஏற்கவில்லை. இந்த வாக்குவாதம் வீடியோவாக வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ