
கருத்து வேறுபாடு காரணமாக, தனது மனைவியை விட்டு பிரிவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!
கனடா பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோ, சோபி (Sophie Gregoire) என்பவரை கடந்த 2005- ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். 18 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் பிரிந்து வாழ முடிவுச் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனடா பிரதமர், “நீண்ட ஆலோசனைக்கு பிறகு இருவரும் கலந்துப் பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம். ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொண்ட அன்பையும், மரியாதையும் வருங்காலங்களிலும் தொடருவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“3 தேசிய அணிகளை அறிவிக்குமளவு இந்தியாவில் கிரிக்கெட் திறமைசாலிகள்”- பிரையன் லாரா புகழாரம்!
ஜஸ்டின் ட்ரூடோ- சோபி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.