spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

-

- Advertisement -

அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

அதிமுகவினரை விமர்சிப்பதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அதிமுகவை தொட்டார் கெட்டார் என்பது அண்ணாமலைக்கே தெரியும். அதிமுகவின் தொண்டனையோ, தலைவரையோ விமர்சித்தால் எதிர்வினையை சந்திக்க நேரிடும். அந்நிலைக்கு அவர் செல்லமாட்டார் என நம்புகிறோம். அந்த நம்பிக்கையை அவர்தான் காப்பாற்ற வேண்டும். அதிமுக மீதான விமர்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது பாஜகவின் பொறுப்பு.

we-r-hiring

செல்லூர் ராஜூவாக இருந்தாலும் அடிமட்ட தொண்டனாக இருந்தாலும் சரி, அதிமுகவினரை விமர்சனம் செய்வதை ஏற்கமாட்டோம். ஓ.பி.ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் காவல்துறையினர் அந்த புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பேனா சிலை சின்னம் அமைப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடுவோம். கடைசி வரை போராடுவோம்” என்றார்.

முன்னதாக அண்ணாமலை, “யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூவுக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது” எனக் கூறியிருந்தார்.

MUST READ