தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவருக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தமிழ்நாடு, மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்ஜிஎம் மாறன் மற்றும் எம்ஜிஎம் ஆனந்த் இவர்களின் நிறுவனமான சதன் அக்ரி பிரேன் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.


கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைவராக இருந்தபோது அதன் நிர்வாகிகள் உடன் சேர்ந்து தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் இந்திய பங்குகளை சுமார் 23.60% வெளிநாட்டிற்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து சுமார் 293 கோடி அளவிற்கு வெளிநாட்டில் கணக்கில் காட்டாமல் முதலீடு செய்துள்ளதாகவும் ஆர்பியை அனுமதி இல்லாமல் மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில் எம் ஜி எம் மாறன் இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட்டு, வெளிநாட்டில் குடியேறி இந்தியாவில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்து வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளார்.

உடனடியாக, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, வெளிநாட்டில் மோசடி செய்து முதலீடு செய்த சொத்துகளுக்கு நிகராக இந்தியாவில் உள்ள சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள ஆரம்பித்தது.
அப்போது, எம்ஜிஎம் மாறனுக்கு தொடர்புடைய நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அமலாக்கத்துறை சுமார் 205 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்களை முடக்கியுள்ளது.
தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை அடுத்து அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
