Homeசெய்திகள்ஆவடிசிறுமி டானியாவிடம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார்

சிறுமி டானியாவிடம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார்

-

- Advertisement -

முகச்சிதைவு நோயால் சிகிச்சை பெற்று வரும் சிறுமி டானியாவிடம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியது  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்-சௌபாக்கியா இவர்களின் மூத்த மகள் 9 வயது சிறுமி டானியா 6 வருடங்களாக அரிய வகை முக சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார்.

we-r-hiring

முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க ஸ்ரீபெரும்புதூர் அருகே சவீதா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது சிறுமி டானியாவை தமிழக முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அதனைத் தொடர்ந்து 25 நாட்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி சிறுமி வீடு திரும்பினார்.

இந்நிலையில் சிறுமி டானியா மீண்டும் ஒரு அறுவை சிகிச்சைக்காக தற்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் சவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சிறுமி டானியாவிற்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த பக்கமுள்ள கண் மூடுவதற்கு சிரமபடுவதாலும், சாப்பிடுவதற்கு வாய் திறக்க அவதிப்படுவதாலும் இந்த அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

தற்போது சிறுமி டானியா சில நாட்கள் மருத்துவரின் முழு கண்காணிப்பில் இருந்து முழு உடல் பரிசோதனைக்கு பிறகு முக சீரமைப்பு செய்யப்பட்ட பகுதியில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் சிறுமி டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் நாசரின் செல்போன் வாயிலாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறுமி டானியா விடம் பேசினார்.

அதில் “கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு தேர்வு நன்றாக எழுதினாயா“ என்று கேட்டார் அதற்கு டானியா “இல்லம் தேடி கல்வி மூலம் நல்ல முறையில் தேர்வு எழுதினேன்“ என்று கூறினார்.

பிறகு டானியா அம்மா சௌபாக்கியாவிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு பயப்படாமல் தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் கூறினார்.

தமிழக முதலமைச்சர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் பேசிய சம்பவம் மருத்துவமனையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

MUST READ