spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆக.15- ல் பவானி சாகர் அணை திறக்கப்படும்"- தமிழக அரசு அறிவிப்பு!

“ஆக.15- ல் பவானி சாகர் அணை திறக்கப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு!

-

- Advertisement -

 

"ஆக.15- ல் பவானி சாகர் அணை திறக்கப்படும்"- தமிழக அரசு அறிவிப்பு!
Photo: Bhavanisagar Dam

வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி பாசனத்திற்காக, பவானி சாகர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

we-r-hiring

“உச்சநீதிமன்றத்தை நாடுவோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

இது தொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறையின் கூடுதல் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணையில் இருந்து, கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகளின் பாசன நிலங்களுக்கு, 23846.40 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், ஆகஸ்ட் 15- ஆம் தேதி முதல் டிசம்பர் 13- ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழகம் வருகிறார் எம்.பி. ராகுல் காந்தி!

இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ