spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

-

- Advertisement -

ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில் சோனியா ராகுலுக்கு பாராட்டு தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.

we-r-hiring

மத வெறுப்பு அரசியலை ராகுல் காந்தி கடுமையாக எதிர்த்து வருகிறார் என்றும் பாஜகவை எதிர்க்க ராகுல் சரியான நபர் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். பாரதிய ஜனதா கட்சியின் குறுகிய எண்ணம் கொண்ட அரசியலை எதிர்ப்பதற்கு சரியான தலைவராக ராகுல் விளங்குவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் சோனியா காந்தியின் முயற்சிகளுக்கு பலன் கிடைத்து இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை நன்கு உணர முடிவதாகவும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸை  உள்ளடக்கிய தேசிய அளவிலான கூட்டணி தேவை என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் காங்கிரஸ் முக்கியத்துவத்தை இழக்கவில்லை என்றும் புத்துயிர் பெற்று வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

MUST READ