
தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் விடுவிக்கும் உத்தரவை மறு பரிசீலனைச் செய்ய, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, வினாடிக்கு 10,000 கனஅடி நீரை கர்நாடகா அரசு திறந்து விட்டு வருகிறது. காவிரியில் உரிய நீரைத் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்த சூழலில், இந்த தண்ணீர் திரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறக்கும் உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜோதிமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாமானியர்!
கர்நாடகாவில் தற்போது வறட்சி நிலவுவதால், தமிழகத்திற்கு நீர் திறக்க இயலாத நிலை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.