அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், ஆகஸ்ட் 12- ஆம் தேதி நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் வரும் ஆகஸ்ட் 28- ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. அதில், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த விளக்கமோ, பதிலோ அளிக்கவில்லை.
“இந்தியாவின் கட்டமைப்பை சீரழித்துவிட்டது பா.ஜ.க.”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
மத்திய குற்றப்பிரிவு பதிவுச் செய்த மூன்று வழக்கு அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை நடைபெற்றது. செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருடன் சேர்ந்து கிரிமினல் சதியில் ஈடுபட்டார். போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் கூட்டுச்சதி; செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா ஆகியோர் வங்கிக் கணக்குகளில் பெரும் தொகை டெபாசிட் ஆகியுள்ளது என அறிக்கையில் அமலாக்கத்துறைத் தெரிவித்துள்ளது.