
தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்க வருகிறீர்கள், மற்ற நேரத்தில் பார்க்க முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியிடம் சாமானியர் ஒருவர் வாக்குவாதத்தில் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!
கரூர் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்டப் பகுதியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், ஜோதிமணி பங்கேற்ற போது, இந்த சம்பவம் நிகழ்ந்தது. தேர்தல் நேரத்தில் 20 நாட்களுக்குள் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் சுற்றி வரும் நீங்கள், மற்ற நேரங்களில் மக்களைக் கண்டு கொள்வது இல்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
150 நாட்கள் மக்களவைக் கூட்டங்களில் கலந்து கொள்கிறேன்; மற்ற நாட்களில் தனது தொகுதியைக் கவனித்து வருகிறேன் என்று ஜோதிமணி எம்.பி. விளக்கம் அளித்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.


