spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉத்தரப்பிரதேச ஆளுநருடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

உத்தரப்பிரதேச ஆளுநருடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

-

- Advertisement -

 

உத்தரப்பிரதேச ஆளுநருடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!
Photo: Raj Bhavan

ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவிற்கு சென்றார். அதைத் தொடர்ந்து, ராஜ்பவனுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.

we-r-hiring

பிரபாஸின் நடிப்பில் உருவாகும் புதிய படம்….. ஜோடியாகும் இரண்டு கதாநாயகிகள்!

அதன் தொடர்ச்சியாக, அங்கு உள்ள பிவிஆர்- ஐநாக்ஸ் திரையரங்கில் (PVR-INOX Theatre) உத்தரப்பிரதேசம் மாநில துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் உள்ளிட்டோருடன் அமர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் ‘ஜெயிலர்’ படம் பார்த்தனர்.

எனினும், அரசு அலுவல்கள் காரணமாக உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் கேசவ பிரசாத் மௌரியா, பாதிலேயே திரையரங்கில் இருந்து வெளியேறினார்.

உத்தரப்பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் ஜெயிலர் படம் பார்க்க இருந்த நிலையில், அவரை திடீரென ரத்துச் செய்யப்பட்டது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தைச் சந்திப்பதற்கு இரவு 07.00 மணிக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியாவில் நடைபெறும் ‘லியோ’ இசை வெளியீட்டு விழா….. எப்போது?

இதனிடையே, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், நாளை அயோத்தி சென்று ராமர் கோயிலில் வழிபாடு நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

MUST READ