
அயோத்தி ராமர்கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் வழிபட்டார்.

டி20 தொடரை வென்றது இந்திய அணி!
நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு சென்றடைந்தார். இந்த பயணத்தில் இரண்டாவது நாளில் அயோத்தியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் வழிபட்ட நடிகர் ரஜினிகாந்த், பின்னர் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கோயிலின் பணிகளையும் பார்வையிட்டார்.
அப்போது, ராமர் கோயிலின் மாதிரியை அயோத்தி கோயிலின் தலைமை அர்ச்சகர் நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், “அயோத்தி வர வேண்டும் என்ற தனது நீண்ட கால் கனவு நிறைவேறியுள்ளது. கோயில் கட்டப்பட்ட பின்னர் மீண்டும் அயோத்தி வர திட்டமிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

நேற்று (ஆகஸ்ட் 20) காலை 10.00 மணியளவில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவை, லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார்.
ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு!
மைசூரில் தான் பொறியியல் மாணவராக இருந்த போதில் இருந்தே தான் ரஜினிகாந்தின் ரசிகன் என அகிலேஷ் யாதவ் அப்போது தெரிவித்தார்.
முன்னதாக, ஆகஸ்ட் 19- ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியாவுடன் சேர்ந்து ‘ஜெயிலர்’ படத்தையும் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


