
நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய லேண்டரியில் இருந்து வெற்றிகரமாக வெளியே வந்தது பிரக்யான் ரோவர். நிலவில் தரையிறங்கிய பிரக்யான் ரோவர் 14 நாட்கள் தொடர்ந்து தனது ஆய்வை மேற்கொள்ளும்.

வெற்றியைத் தீர்மானிக்க நாளை டை பிரேக்கர்!
26 கிலோ எடைக்கொண்ட பிரக்யான் ரோவர் நிலவில் ஏழு வகையான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. ரோவரில் இணைக்கப்பட்ட தொலைத்தொடர்பு சென்சார் அமைப்பு, ஆண்டனாக்கள் மூலம் தகவல்கள் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சந்திரயான்- 3ன் ரோவர் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியது. நிலவின் மேற்பரப்பில் இந்தியா தனது ஆய்வைத் தொடங்கியுள்ளது. ரோவர் நிலவில் வலம் வரத் தொடங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்னீசியம், அலுமினியம், சிலிகான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம், இரும்பு குறித்து நிலவின் பாறைகளிலும், மணலிலும் பிரக்யான் ரோவர் ஆய்வு மேற்கொள்ளும். அத்துடன், நிலவின் நிலப்பரப்பில் ஏற்படும் நில அதிர்வுகள், நில விரிசல்கள், மேடு, பள்ளங்கள் குறித்து அளவீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 தொடரை வென்று இந்திய அணி அசத்தல்!
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்பதால் ஆய்வு முடிவுகளை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றனர்.


