spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"பலிகடா ஆக போவதை உணராமல் அ.தி.மு.க. ஆதரிக்கிறது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“பலிகடா ஆக போவதை உணராமல் அ.தி.மு.க. ஆதரிக்கிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

- Advertisement -

 

MKStalin

we-r-hiring

சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி மனோகரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து பேசிய தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “யார் ஆட்சிக்கு வர வேண்டாம் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். இந்தியா கூட்டணிக் கூட்டங்களைப் பார்த்து அச்சம் கொண்ட பா.ஜ.க. நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அதிபராக இருக்க நினைக்கின்றனரே தவிர நாட்டின் நலன் குறித்து நினைக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டைக் கைப்பற்றியது போல இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். தி.மு.க.வில் வாரிசு உள்ளது என கூறுகின்றனர்; கழகம் தான் குடும்பம், குடும்பம் தான் கழகம். ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவிற்கு தலைவராக நியமித்து குடியரசுத் தலைவர் பதவியைக் கொச்சைப்படுத்தி உள்ளனர்.

‘ஸ்லீப் மோடு’ நிலைக்கு சென்ற ரோவர்- இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பலிகடா ஆகப்போகிறோம் என தெரியாமல் ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கையை ஆதரிக்கிறது அ.தி.மு.க. ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறையால் தி.மு.க.விற்கு மட்டுமல்ல எல்லா கட்சிகளுக்குமே பாதிப்பு தான். ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்தவே திடீர் என நாடாளுமன்றக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த ஆய்வுக்குழுவில் தி.மு.க. சேர்க்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ