spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் குளறுபடி- ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தண்டனை

ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் குளறுபடி- ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தண்டனை

-

- Advertisement -

ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் குளறுபடி- ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தண்டனை

ஐ.பி.எஸ். அதிகாரிகள் திசா மிட்டல் மற்றும் தீபா சத்யன் ஆகியோர் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி- 25,000 இருக்கைக்கு 40,000 பேர் வந்ததால்  சிக்கல்

சென்னை பள்ளிக்கரணை சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் தீபா சத்யன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை கிழக்கு சட்டம், ஒழுங்கு இணை ஆணையரான திஷா மிட்டல் ஐபிஎஸ் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை சரியாக கையாளவில்லை என்ற புகார் அடிப்படையில் திஷா மிட்டல் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

we-r-hiring

IPS

சென்னை அடுத்த பனையூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏ.ஆர்.ரகுமானின் “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அளவுக்கு அதிகமாக டிக்கெட்கள் விற்கப்பட்டதால் நிற்கக்கூட இடமில்லாமல் ரசிகர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பலரால் பங்கேற்கமுடியாமல் போனது. நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதது பற்றி வலைதளங்களில் பலர் ஆதங்கம் தெரிவித்த நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடதக்கது.

MUST READ