பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கிய நில நொடிகளில் முடிவு
பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே பயணத்தை உறுதி செய்வதற்கான பயண சீட்டுகள் விற்று தீர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.

பொங்கல் பண்டிக்கை 2024 ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் பயணச் சீட்டு 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ள முடியும். இதற்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மேலும், முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்திலேயே பயணத்தை உறுதி செய்வதற்கான பயண சீட்டுகள் விற்று தீர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.

முன்பதிவு செய்யாமல் சென்றால் பெரும் சிரமம் ஏற்படும் என அதிகாலையே வந்து காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஜனவரி 12ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை ) சொந்த ஊர் செல்பவர்கள் வியாழக்கிழமையும் , ஜனவரி 13ஆம் தேதி ( சனிக்கிழமை ) சொந்த ஊர் செல்பவர்கள் செப்டம்பர் 15ஆம் தேதியும், ஜனவரி 14-ம் தேதி ( ஞாயிறு ) போகி அன்று சொந்த ஊர் செல்பவர்கள் செப்டம்பர் 16ஆம் தேதியும் முன்பதிவு செய்ய உள்ளனர். அதன்படி, இன்று முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்திலே நெல்லை எக்ஸ்பிரஸ் , முத்து நகர் எக்ஸ்பிரஸ் , பொதிகை எக்ஸ்பிரஸ் , பாண்டியன் எக்ஸ்பிரஸ் உட்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களில் பயண சீட்டுகள் விற்று தீர்ந்தன.


