Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணா பிறந்தநாள்- காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

அண்ணா பிறந்தநாள்- காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

-

- Advertisement -

அண்ணா பிறந்தநாள்- காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 115-வது  பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Image

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருடைய திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெறும் அரசு விழிவில் கலந்துக்கொண்டு தமிழகம் முழுவதும் 1 கோடி மகளிர் பயன்பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடக்கி வைத்து பேருரையாற்றினார்.
காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய பிறகு  அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள வருகை பதிவேற்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று திராவிட மாடலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் தொடங்கி வைப்பதில் பெருமையடைகிறேன் என எழுதியுள்ளார்.
Image
இந்த நிகழ்ச்சியில் சிறு.குறு.நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன், மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

MUST READ