spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 6ஆவது முறையாக நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 6ஆவது முறையாக நீட்டிப்பு!

-

- Advertisement -

 

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Photo: Minister Senthil Balaji

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆறாவது முறையாக நீடித்து , சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

சனாதன தர்மம்- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் செப்டம்பர் 29- ஆம் தேதி வரை நீடித்து, நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.

சனாதன தர்மம்- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் 14- ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் 12- ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தனர்.

முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கையும், அவரது பிணை மனுவையும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

“சீமான் கூறிவிட்டார்….பெங்களூருக்கு செல்கிறேன்…. சென்னைக்கு வரமாட்டேன்”- நடிகை விஜயலட்சுமி பேட்டி!

இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி பிணை மனு மீதான தீர்ப்பு, வரும் செப்டம்பர் 20- ஆம் தேதி வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ