spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்து

சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்து

-

- Advertisement -

சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்து

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே தடுப்பு கட்டையில் மோதிய அரசு விரைவு பேருந்து 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

Bus accident

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இன்று அதிகாலை சென்னையிலிருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. அரியலூர் பகுதியைச் சேர்ந்த ராஜராஜன் என்பவர் பேருந்தை இயக்கி வந்துள்ளார்.

we-r-hiring

Bus accident

விழுப்புரம் மாவட்டம் பிள்ளை சாவடி அருகே பேருந்து சென்றுகொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு விரைவு பேருந்து சாலை நடுவே இருந்த தடுப்பு கட்டையில் பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்கள் அடைந்தனர். மேலும் அருகில் இருந்தவர்கள் பயணிகளை மீட்டு புதுச்சேரி மருத்துவமனை அனுமதித்தனர். விசாரணையில் பேருந்தை இயக்கி வந்த ராஜராஜன் தூக்க கலக்கத்தில் பேருந்தை இயக்கி வந்தது தெரிய வந்துள்ளது.

MUST READ