spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆவடியில் சரக்கு லாரி மோதி ஒருவர் பலி

ஆவடியில் சரக்கு லாரி மோதி ஒருவர் பலி

-

- Advertisement -

ஆவடியில் சரக்கு லாரி மோதி ஒருவர் பலி

ஆவடி கோவர்த்தனகரி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 34). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம், கவரைப் பாளையத்தில் உள்ள அவரது தாயைப் பார்த்துவிட்டு, வீட்டிற்கு திரும்பி சென்றபோது, பின்னால் அரிசி ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி மோதி பலத்த காயமடைந்தார்.

we-r-hiring

ஆவடியில் சரக்கு லாரி மோதி ஒருவர் பலி

நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து போலீசார், அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், தப்பி ஓடிய திருவண்ணாமலையைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் மூர்த்தி (வயது 45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ