
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் ‘லக்கி பாஸ்கர்’….. லேட்டஸ்ட் அப்டேட்!
மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (செப்.24) பிற்பகல் 01.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்களை எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 104 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 72 ரன்களையும், கே.எல்.ராகுல் 52 ரன்களையும் எடுத்தனர்.
குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இதையடுத்து, 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்க முதலே விக்கெட்டுகளைப் பறிக்கொடுத்தது. போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் ஆஸ்திரேலியா அணிக்கு DLS முறைப்படி, 33 ஓவர்களில் 317 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், 28.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
விரைவில் தொடங்குகிறதா விக்ரமின் மகாவீர் கர்ணா?…. வெளியான அறிவிப்பு!
இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 1 விக்கெட்டையும், பிரசித் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


