பொன்னியின் செல்வன்-2 படத்துக்காக டப்பிங் பணிகளை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இன்று தொடங்கினார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.
Good morning 3rd persons!
Guess what’s happening for what ?
1 Clue is 2 pic.twitter.com/CxSkb5H92z— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 3, 2023

லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, ஷோபிதா, ஐஸ்வர்யா லெட்சுமி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே எடுத்து முடித்துவிட்ட இயக்குனர் மணிரத்னம். அதன் இறுதி பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான வேலைகளும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்துக்கான டப்பிங் பணிகளை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இன்று தொடங்கி உள்ளார். அதற்கான அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.