spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டாசு கடை தீ விபத்து- பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

பட்டாசு கடை தீ விபத்து- பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

-

- Advertisement -

 

பட்டாசு கடை தீ விபத்து- பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
File Photo

பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

we-r-hiring

கிரிக்கெட் போட்டி- மெட்ரோவில் நாளை இலவசமாகப் பயணிக்கலாம்!

வரும் நவம்பர் 12- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படவுள்ள நிலையில், பட்டாசு விற்பனையும், பட்டாசு உற்பத்தியும் அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், தமிழகம்- கர்நாடகா மாநிலங்களின் எல்லையான அத்திப்பள்ளியில் சாலையோரமாக இருந்த பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், கடையில் இருந்த ரூபாய் 1.50 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியதில் லாரி பைக்குகள் சேதமடைந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பட்டாசுக் கடையில் 25- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், லாரியில் வந்து பட்டாசுகளை இறக்கும் போது, மின் கம்பி உரசி தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ