
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டைக் காண்பித்தால் மெட்ரோ ரயிலில் நாளை (அக்.08) இலவசமாகப் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
“சிறுதானியங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நாளை (அக்.08) மதியம் 02.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக, இரு அணி வீரர்களும் கிரிக்கெட் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
“இஸ்ரேல் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது”- பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!
இந்த நிலையில், உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியைப் பிரபலப்படுத்தும் வகையிலும், கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காகவும் நாளை (அக்.07) மட்டும் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டைக் காண்பித்து, மெட்ரோ ரயிலில் இலவசமாகப் பயணிக்கலாம் என்றும், நாளை (அக்.07) நள்ளிரவு 12.00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.