spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக முன் அனுமதி பெற வேண்டும்"- தமிழக அரசு அறிவிப்பு!
Photo: TN Govt

மூன்று மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஒன்பது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

21வயது பெண் தூக்கிட்டு தற்கொலை-போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த செந்தில் ராஜ், சிப்காட் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநராகவும், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சிப்காட் நிர்வாக இயக்குநராக இருந்த சுந்தரவள்ளி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையராக இருந்த வீரராகவ ராவ், தொழில்நுட்பக் கல்வி ஆணையராகவும், திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியர் ஸ்ருதஞ்சய் நாராயணன், விழுப்புரம் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சியின் திட்ட அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆவடி மார்க்கெட் பகுதியில் டீ கடையில் தீ விபத்து

வேலூர் மாநகராட்சி ஆணையாளர் ரத்தினசாமி, ராமநாதபுரம் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சியின் திட்ட அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

MUST READ