spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடி மார்க்கெட் பகுதியில் டீ கடையில் தீ விபத்து

ஆவடி மார்க்கெட் பகுதியில் டீ கடையில் தீ விபத்து

-

- Advertisement -

ஆவடி மார்க்கெட் பகுதியில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து.

ஆவடி மார்க்கெட் பகுதியில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து.

ஆவடி காய்கறி மார்க்கெட்டில் பாபு என்பவர் டீ கடை நடத்தி வந்துள்ளார்.அந்த கடையில் இன்று திடீரென்று சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ சட்டென பரவி கடையை நாசமாக்கியது. மேலும் அருகாமையில் உள்ள மகாலட்சுமி ஜுவல்லர்ஸ் கடையிலும் தீ பரவி எரிய ஆரம்பித்தது.இதனை கண்ட பொதுமக்கள் ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.உடனே விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

we-r-hiring

இதில் டீக்கடை உரிமையாளர் பாபு என்பவருக்கு தீக்காயம் ஏற்பட்டு அருகாமையில் உள்ள இமானுவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆவடி மார்க்கெட் பகுதியில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து.

 

 

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்டு வணிக வளாகங்கள் இயங்கிக் கொண்டு வருகிறது. குறிப்பாக ஆவடி ரயில் நிலையத்திலிருந்து மார்க்கெட் பகுதியில் செல்லக்கூடிய இடத்தில் 50க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது.இந்த வணிக வளாகத்தில் காய்கறிகள் விற்பனை செய்வது வழக்கம்.எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் ஆவடி காய்கறி மார்க்கெட்டில் டீக்கடையில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ