Homeசெய்திகள்தலையங்கம்ஆளுநர் அந்த வேலைலை மட்டும் பார்க்கட்டும்; எந்த அழுத்தத்திற்கும் விஜய் அரசு அடிபணியாது - அமைச்சர்...

ஆளுநர் அந்த வேலைலை மட்டும் பார்க்கட்டும்; எந்த அழுத்தத்திற்கும் விஜய் அரசு அடிபணியாது – அமைச்சர் நிர்மல்குமார் அதிரடிப் பேட்டி!

-

- Advertisement -

அமைச்சர் நிர்மல்குமார்
​திமுக குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது என்றும், எடப்பாடி, ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லாதவர்களே தவெக-வில் இணைகின்றனர் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நிர்மல்குமார் மதுரையில் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

we-r-hiring

​ஆளுநர் மாளிகைக்குள் வேலை பார்த்தால் போதும்:

“தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை ஆய்வு செய்வது ஆளுநருக்குத் தேவையில்லாத விஷயம். அதற்கு அவருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. ஆளுநர் மாளிகை களமிறங்கி என்ன செய்துவிட முடியும்? ஆளுநர் களமிறங்கி மண்வெட்டி எடுத்து வேலை செய்யப் போகிறாரா? ஆளுநர் மாளிகைக்குள் என்ன வேலை இருக்கிறதோ அதை மட்டும் அவர் செய்தால் போதும்.
​வைகை ஆற்றைத் தூர்வாருவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance) மத்திய அரசிடமிருந்து இன்னும் வரவில்லை. அந்த அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும்.”

​குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் திமுக:

“தற்பொழுது சட்டமன்றத்தில் குதிரை பேரத்தில் ஈடுபடுவது ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும்தான். எந்தத் தைரியத்தில் இந்த ஆட்சி நீடிக்காது என்று ஸ்டாலின் சொல்கிறார்? எங்கள் தவெக ஆட்சி அமைந்து இந்த 30 நாட்களில் ஸ்டாலின் என்ன மாபெரும் தலைவராகிவிட்டாரா? அவர் மீதான மக்கள் செல்வாக்கு என்ன என்பதைத் தான் மக்கள் கொளத்தூரில் காட்டியிருக்கிறார்கள்.
​எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ-க்களை யாராலும் நெருங்கக்கூட முடியாது. குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கவே திமுக தற்பொழுது முயல்கிறது. அதேபோல், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் தலைமையின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான், அதிமுக மற்றும் திமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி தவெக-வில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.”

செந்தில் பாலாஜி -  அமைச்சர் நிர்மல்குமார் - மு.க.ஸ்டாலின்

​அனிதா ராதாகிருஷ்ணன் – செந்தில் பாலாஜி கைது குறித்து:

“முதலமைச்சர் விஜய் அவர்களின் தனிப்பட்ட விஷயம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மிகக் கீழ்த்தரமாக, ஒருமையில் பேசினார். அவர் பேசியதை எந்தவொரு நாகரிக மனிதர்களும் ஏற்க முடியாது; ஏன், அவரது குடும்பத்தினராலே கூட அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

​கரூர் விபத்து எப்படி நடந்தது என்று ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் தெரியும். அங்கு 41 பேரின் மரணத்திற்கு முழு முதற்காரணம் செந்தில் பாலாஜிதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மேடையில் வைத்துக்கொண்டே நயினார் நாகேந்திரன் வெளிப்படையாகச் சொன்னார்” என்றார்.

முதலமைச்சர் விஜய் யாருக்கும் ‘Compromise’ ஆக மாட்டார்:

“மத்திய அரசு அல்லது ஆளுநர் என யாருடைய அழுத்தத்திற்கும் இந்த அரசு அஞ்சாது. முதலமைச்சர் விஜய் எதற்காவும், யாருக்காகவும் கொள்கை ரீதியாக சமரசம் (Compromise) செய்து கொள்ள மாட்டார். ஆளுநரின் தலையீடு குறித்து முதலமைச்சர் ஏன் இன்னும் பேசவில்லை என்று கேட்கிறீர்கள்; எல்லா விஷயங்களுக்கும் முதலமைச்சரே பேச வேண்டிய அவசியமில்லை. அவரது சார்பாகத் தான் அமைச்சர்களாகிய நாங்கள் தகுந்த பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

MUST READ