spot_imgspot_img
Homeசெய்திகள்தலையங்கம்விஜய் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு திருந்தி வாழ்வது நல்லது...

விஜய் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு திருந்தி வாழ்வது நல்லது…

-

- Advertisement -

தவெக தலைவர் விஜய் தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்டு, மன்னிப்பு கிடைத்தால், மீண்டும் குடும்பம் நடத்துவதே சிறந்த வழிமுறையாக இருக்கும்.விஜய் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு திருந்தி வாழ்வது நல்லது...

தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா கடந்த சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த செய்தி நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தவெக தலைவர் விஜய் தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்டு நல்ல முறையில் வாழ்க்கையை தொடர வேண்டும் அல்லது கோர்ட் சொல்லும் நியாயமான ஜீவனாம்சம் தொகையை கொடுத்து முறைப்படி விவாகரத்து செய்து விட்டு வாழ வேண்டும்.

we-r-hiring

இரண்டில் ஏதாவது ஒன்றை விஜய் செய்தாக வேண்டும். இரண்டையுமே செய்யாமல் தப்பிக்க முடியாது என்ற சட்ட நிலை மற்றும் சமூக நிலையை பெண்கள் மற்றும் சமூக சீர்திருத்த ஆண்கள் பல தலைமுறைகளாக கடும் பாடுபட்டு எடுத்து வந்திருக்கிறார்கள். கடந்த 5 வருடங்களாக இரண்டையும் செய்யாமல் விஜய் தனது மனைவி சங்கீதாவிற்கு மனவலியை கொடுத்து ஏமாற்றி வந்தது மிகுந்த கண்டனத்துக்கு உரியது.

கல்வி உரிமை, சொத்துரிமை, காதலிக்கும் உரிமை, விவாகரத்து உரிமை, ஜீவனாம்சம் உரிமை அனைத்தும் பல தியாகங்கள், போராட்டங்கள் போன்ற உழைப்பின் வழியாக பெறப்பட்டது. நீங்கள் சமூகத்தில் யாராக இருந்தாலும் உங்களை சுற்றி உள்ள பெண்ணுக்கு இந்த உரிமை உண்டு. இந்த உரிமை ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம்.

கடந்த காலங்களில் ஆடு, மாடு போல மதிக்கப்பட்ட பெண்கள், ஜனநாயகத்தில் தான், மனிதர்களாக குடிமகள்களாக மதிக்கப்படுகிறார்கள். நீங்கள் நினைத்த மேனிக்கு நினைத்தவருடன் இருந்து விட்டு உங்களையும், உங்கள் பிள்ளைகளையும் ஆளாக்கிய பெண்ணை தெருவில் வீசிவிட்டு ஒய்யாரமாக செல்வதை வேடிக்கை பார்க்கவா காந்தியும் அம்பேத்கரும் பெரியாரும் சரோஜினி அம்மையாரும் அரசியல் சாசனத்தை உருவாக்கி வைத்தார்கள்? 50 வருடத்திற்கு முன்பு 3 மனைவியுடன் மன்னர்கள் இருந்திருக்கலாம். அதையே முன்னோடியாக எடுப்பதற்கு, புதிதாக நீங்கள் எதற்கு? முந்தைய அரசியல்வாதிகளின் மனைவிகளுக்கு விவாகரத்து வழக்கு தொடுக்கும் உரிமை, சட்ட மற்றும் சமூக அனுகூலங்கள் மூலம் கிடைத்ததில்லை.

ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒரு பெண் ஒரு குழந்தையை பெற்று வளர்த்து ஆளாக்குவதற்கு 25,000 மணி நேரம் செலவு செய்கிறாள் என்று உங்களுக்கு தெரியுமா? மாத சுழற்சியின் வலி தெரியுமா, பிரசவ வலி தெரியுமா அல்லது சுழற்சி நிற்கும் மெனொபாஸ் முன்பும் பின்பும் நடக்கும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் உடல் மற்றும் மன வேதனைதான் தெரியுமா? இருக்கும் போதை வஸ்து பிரச்சினையில் 24 மணி நேரமும் கண்ணும் கருத்துமாக உங்கள் பிள்ளைகளை வளர்த்திருக்காவிட்டால் எந்த வஸ்துவிடம் சிக்கி பிள்ளைகள் என்ன ஆகி இருப்பார்கள் என்று சிந்திக்க வேண்டாமா?

45 முதல் 54 வயதில் வரும் மெனோபாஸ் காலத்தில்தான் பெண்கள் உலகம் முழுவதும் அதிகமான விவாகரத்து விண்ணப்பம் செய்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம் சொல்கிறது. மெனோபாஸ் காலத்தில் 90% வரை ஹார்மோன் மாற்றங்கள், திடீரென்ற உடல் உஷ்ண மாற்றம், மறதி, மன உணர்ச்சிகளின் திடீர் மாற்றம், பிள்ளைகளின் பதின்ம வயது என ஏற்கனவே பல பிரச்சினைகளை கையாண்டு கொண்டு இருக்கும் நேரத்தில் உறுதுணையான இணையராக இல்லாமல், வேறு யாருடனோ நீங்கள் நேரம் செலவழித்து கொண்டு இருந்தது எவ்வளவு பொறுப்பற்ற செயல்? இதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்காமல் இருப்பது எப்படி நியாயமாக இருக்கும்?

நீங்கள் உங்கள் தொழிலில் கவனம் செலுத்துவதற்கு உங்களையும் வீட்டையும் அக்கறை மற்றும் பொறுப்புடன் உங்கள் மனைவி கவனிக்கா விட்டால், நீங்கள் எட்டிய உயரத்தை எட்டி இருக்க முடியுமா? நீங்கள் பெற்ற புகழ் பணம் அனைத்திலும் உங்கள் மனைவியின் கணிசமான பங்கு இருக்கிறது என்பதை எப்போது உணர்வீர்கள்?

மன்னர்கள் எந்த பெண் மீது எப்போது விருப்பம் கொண்டாலும் அதை கேள்வி கேட்கும் உரிமை அவர்கள் மனைவிகளுக்கு இருந்ததில்லை. அந்த மன்னர் காலத்தை பெண்களின் இருண்ட காலமாக இருந்தது. அனைத்து உரிமையும் தந்த மக்களாட்சியை பெண்கள் நன்றியுடன் பார்க்கிறார்கள். இந்த மக்களாட்சியை பயன்படுத்தி ஆட்சிக்கு வர விரும்பும் நீங்கள், பெண்களுக்கான பல புதிய சட்டங்கள் போட விரும்பும் நீங்கள், இந்த சட்டத்தின் முன்பு குற்றவாளியாக நிற்கலாமா?

கோடிக்கணக்கான இளைஞர்கள், நீங்கள் சொன்ன வார்த்தைகளை, நீங்கள் போட்ட சட்டையை , காலணியை கூட விரும்பி அணிகின்றனர். அவர்களுக்கு முன்னோடியாக நல்ல கணவனாக, இருந்து காண்பிக்க வேண்டாமா? இதை கூட யாராவது சொல்லிதான் தெரிய வேண்டுமா?

கணவனின் பிரிவு ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பெரிய மன உளைச்சல் தரும் தெரியுமா? 5 வருடம் அந்த மாபெரும் மனவலியை, உங்களை காதலித்த தவறை தவிர வேறு எந்த தவறும் செய்யாத ஒரு அப்பாவி பெண்ணிற்கு, உங்கள் முன்னாள் ரசிகையான சங்கீதாவிற்கு, செய்து விட்டு, உங்களை அண்ணா என்று பாசத்துடன் அழைக்கும் கோடி தமிழ் பெண்களுக்கு என்னதான் செய்து விட போகிறீர்கள்? உங்களையே மாற்றி கொள்ள முடியவில்லை என்றால் உங்களால் இங்கே எதை மாற்றி விட முடியும்? நடிகர் விஜய் அவர்களே, கொஞ்சமும் வெட்கப்படாமல் உங்கள் மனைவியிடம் மன்னிப்பு கேளுங்கள். வாழ்வதற்கு வழியை பாருங்கள்.

தவெக தலைவர் விஜய்யின் மனைவி விவாகரத்துக் கோரி மனுத் தாக்கல்!!

 

MUST READ