Homeசெய்திகள்தலையங்கம்இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?

இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?

-

- Advertisement -

கூடா நட்பு கேடாய் முடியும் – அமெரிக்காவுடன் நட்பும் இந்தியாவிற்கு கேடுதான் விளைவிக்கும்.

இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?

we-r-hiring

​அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னுக்கு பின் முரணாகவும், கோபமாகவும், எரிச்சலூட்டும் வகையில் பேசி வருவதால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவுடன் உறவு வைத்திருக்கும் இந்தியாவின் பொருளாதாரமும் நாளுக்கு நாள் பின்னோக்கி திசை தெரியாத பாதைக்கு அழைத்து செல்கிறது.

அமெரிக்கா  பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தற்போது சவால்களைச் சந்தித்து வருகிறது.

அந்த நாடு கடைபிடித்து வரும் வெளியுறவுக் கொள்கையினால் .உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் (De-dollarization) மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதேபோன்று உள்நாட்டுக் கடன் சுமைகளும் அதிகரித்து ஒரு தள்ளாட்டத்தை சந்தித்து வருகிறது.

இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் கல்வி, சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளுக்கு ஒதுக்கும் நிதியை குறைத்துக்கொண்டு ராணுவத்திற்கு 140 லட்சம் கோடி ஒதுக்கி  வரலாறு காணாத அளவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுராவையும் அவருடைய மனைவி சிலியா புலோரஸையும் துப்பாக்கி முனையில் கடத்தி சென்று அமெரிக்கா சிறையில் அடைத்துள்ளனர். ஒரு நாட்டின் அதிபரை அவருடைய நாட்டில் புகுந்து கடத்தி சென்றது ஆபத்தான செயல். ஒரு நாட்டின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க அமெரிக்கா செய்கின்ற அத்துமீறலை கண்டிக்காமல் இந்தியா அமைதியாக வேடிக்கை பார்ப்பது அதைவிட ஆபத்தானது.

​இந்தியா பாரம்பரியமாகவே ‘அணிசேரா கொள்கையைக் கடைபிடித்து வருகின்ற நாடு.  தற்போது சீனாவுடனான எல்லைப் பதற்றம் காரணமாக, இந்தியா அமெரிக்காவிடம் அதிகம் நட்பு பாராட்டி வருகிறது.

அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமாகப் பிணைத்துக் கொள்ளும்போது, இந்தியா தனது தனித்துவமான முடிவெடுக்கும் அதிகாரத்தை நாளுக்கு நாள் இழந்து வருவதை பார்க்க முடிகிறது.

ரஷ்யா – உக்ரைன் போர் அல்லது மத்திய கிழக்கு விவகாரங்களில் அமெரிக்காவின் நிலைப்பாடுகள் அடிக்கடி மாறுபடுகிறது.இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?​ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுடனான இந்தியாவின் நீண்டகால உறவில் தற்போது அமெரிக்காவின் அழுத்தத்தினால் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.

​அமெரிக்கா தனது சொந்த நலனுக்காக எந்த நேரத்திலும் தன் கூட்டாளிகளை மாற்றிக்கொள்ளும் (உதாரணமாக: ஆப்கானிஸ்தான் வெளியேற்றம்). அத்தகைய சூழலில் இந்தியாவுக்கு மாற்றுத் திட்டங்கள் இல்லாமல் போய்விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்தியா தனது தேசிய நலன்களைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவுடன் உறவை வளர்த்துக் கொண்டாலும் அதே நேரத்தில் ஆசியா கண்டத்திலும் இன்னும் பிற உலக நாடுகளுடனான தனது பிணைப்பை வலுவாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை அமெரிக்கா பலவீனமடைந்தாலோ அல்லது அதன் கொள்கைகள் மாறினாலோ, இந்தியா எந்த நாடும் இல்லை என்கிற நிலையில் அனாதையாக நின்று விடக்கூடாது.

​இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானுக்கு எதிரான போரைத் தொடங்கி ஒரு மாதம் ஆகிறது, ஆனால் அமெரிக்காவிற்கு இது நல்லதாக தெரியவில்லை என்று உள்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாடு தழுவிய உரையாற்றிய சில நிமிடங்களிலேயே பங்குச் சந்தைகள் சரிந்தன. ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்வதை நிர்வகிப்பதற்கான ஒரு சூத்திரத்தை ஈரானும் ஓமானும் சேர்ந்து உருவாக்கி வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அறிவித்த பின்னரே சந்தை சற்றே மீண்டது.

டிரம்ப்பின் உரைக்கும், ஈரானிய வெளியுறவு துறை அமைச்சரின் அறிக்கைக்கும் இடைப்பட்ட 24 மணி நேரத்திற்கு குறைவான நேரத்தில், அமெரிக்க முதலீட்டாளர்கள் டிரம்ப்பை விட ஈரானிய அமைச்சரையே அதிகம் நம்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

​இந்தியா தற்போது பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் தலைவராக உள்ளது. தற்போது நடைபெற்று வரும் மோதலில் ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஈடுபட்டுள்ளன.

இந்த மூன்று நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ‘மேற்கத்திய எதிர்ப்பு கூட்டமைப்பு’ தனது உறுப்பினர்களுக்கு இடையிலான வேறுபாடுகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பது இயல்பானது. ஆனால், ஒரு மாதப் போருக்குப் பிறகும், அத்தகைய நகர்வு எதுவும் இந்திய தரப்பில் தெரியவில்லை. மாறாக, ஹார்முஸ் நீரிணை நெருக்கடி குறித்து இங்கிலாந்தில் நடைபெற்ற 40 நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றுள்ளது.

இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?

​பல்கலைக்கழகங்கள், சுகாதார நிலையங்கள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் போன்ற சிவிலியன் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட ஏராளமான தாக்குதல்கள் உட்பட, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய சட்டவிரோதப் போரைப் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பாத அல்லது முடியாத நிலையில் உள்ள இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களை இந்தியா விமர்சிக்க மட்டும் முன்வந்துள்ளது வேதனையாக உள்ளது. அதே நேரத்தில், வெனிசுலாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவை இந்தியா நான்கு மடங்காக அதிகரித்துள்ளது (தற்போது வெனிசுலா எண்ணெய் துறையைத் தான் நடத்துவதாக ட்ரம்ப் நிர்வாகம் கூறுகிறது).

இங்கே இன்னொரு சம்பவத்தையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏப்ரல் 3 அன்று, போர் தொடங்கிய பிறகு பிரெஞ்சு சரக்குக் கப்பல் முதலாவதாக ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டது. பிரான்ஸ் ஈரானுக்கு “சுங்கம்” செலுத்தியதா அல்லது ஏதேனும் வாக்குறுதி அளித்ததா என்பது முக்கியமல்ல; ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்வதை ஈரான் தான் கட்டுப்படுத்துகிறது என்பதை ஏற்றுக்கொண்ட முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது என்பதே முக்கியம்.

ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது பிற நாடுகளின் பொறுப்பு என்று டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வரும் நிலையில், பிரான்ஸ் தனது எரிவாயு மற்றும் எண்ணெய்க்காக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற்றுள்ளது.

​ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அமெரிக்க அல்லது உலகளாவிய சந்தைகள் எவையும் டிரம்ப் நிர்வாகத்தால் ஹார்முஸ் நீரிணை நெருக்கடியைச் சமாளிக்க முடியும் என்று நம்பவில்லை. போரின் நடுவில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth), அமெரிக்க இராணுவத் தளபதியை (Army Chief of Staff) பணிநீக்கம் செய்தது, இந்த போரில் அமெரிக்கா தீவிரமாக இல்லை என்கிற சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இந்த யதார்த்தத்தை உணர்ந்து, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி எண்ணெய் பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டது. கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் -3) முதல் ஜப்பானிய எண்ணெய் டாங்கர் ஹார்முஸ் நீரிணையைக் கடந்து சென்றது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

​இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் தெற்காசியாவின் பாதிப்பு

​இந்தியா இன்னமும் அமெரிக்கா வழிகாட்டுவதற்காகக் காத்திருக்கிறது, குறிப்பாக அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி விடக்கூடாது  என்பதில் கவனமாக இருக்கிறது.  தெற்காசியாவின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான நாடு என்ற முறையில் அதன் பொறுப்பை இந்தியா தட்டிக்கழிக்கிறதோ என்று கருத முடிகிறது.

​அமெரிக்கா –  இஸ்ரேல் – ஈரான் போரினால் தெற்காசியா நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

​இலங்கை அரசு உர இறக்குமதியை நிறுத்தியதால் 2021இல் ஏற்பட்ட  பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் வேளையில், தற்போது யூரியா விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?

அதேபோன்று ​வங்கதேசம் எரிபொருளைப் பங்கீடு செய்யத் தொடங்கியுள்ளது, போரினால் எரிபொருள் தீர்ந்துபோகும் என்கிற முதல் நாடாக இது இருக்க போகிறது.

மேலும் ​நேபாளம் எண்ணெய் விலை உயர்வு, வளைகுடா நாடுகளிலிருந்து வரும் வருமானம் (remittances) குறைவதாலும் சுற்றுலா பாதிப்பினாலும் தவிக்கிறது. ​பாகிஸ்தானிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 50% மேல் உயர்ந்துள்ளது. ​ஆப்கானிஸ்தானும்  ஈரானிலிருந்து திரும்பும் அகதிகளால் திணறும் இந்த நாடு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

​200 கோடி மக்கள் வாழும் ஒரு பிராந்தியத்திற்காகப் பேச ஒரு வலுவான குரல் இல்லை. இந்தியா அந்த குரலாக இருந்திருக்கலாம். இந்தியா ‘உலகளாவில் தெற்கின் குரலாக’ (Voice of the Global South) உருவெடுத்திருக்கலாம்.

முன்னாள் பிரதமர் நேரு காலம் முதல் இதுவே இந்தியாவின் ராஜதந்திரத்தின் பலமாக இருந்தது. ஆனால் இதைச் செய்ய, இந்தியா கடந்த பத்து ஆண்டுகால வெற்று ராஜதந்திரத்திலிருந்து வெளியே வர வேண்டும். பணக்கார நாடுகளின் மேஜையில் அமர விரும்புவது, தெற்காசியா நாடுகள் தரம் குறைந்தவை என்று  புறக்கணிப்பது, அண்டை நாடுகளை மிரட்டுவது போன்ற போக்கை கைவிட வேண்டும். பாகிஸ்தானுடனான கடினமான உறவைக் கையாள்வதை விட, சார்க் (SAARC) அமைப்பையே கைவிடுவது தீர்வாகாது.

​தெற்காசியா நமது வீடு. நமது அண்டை நாடுகள் எவ்வளவு கடினமானவர்களாகவோ அல்லது ஏழைகளாகவோ இருந்தாலும், இங்கு நாம் நிலைத்து நிற்கவில்லை என்றால், நமது புவியியல் ரீதியான பலத்தைப் பயன்படுத்தவில்லை என்றால், நாம் எங்கேயும் ஆதரவு இல்லாத நிலைக்குத் தள்ளப்படுவோம்.

கூடா நட்பு கேடாய் முடியும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்: 38-வது நாள் நேரலைத் தகவல்கள்

MUST READ