நடிகர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்ட வழக்கில் அவரது மனைவி சங்கீதா புதிததாக தாக்கல் செய்துள்ள மனுவை விரைந்து விசாரிக்க நீதிமன்றத்தில் முறையிட முடியும் என குடும்ப நல நீதிமன்ற வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதி ஒத்தி வைத்த நீதிமன்றம், அன்று நேரில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் சங்கீதா புதிதாக ஒரு இடையீட்டு மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். அதில் விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த இடையீட்டு மனுவை விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க குடும்ப நல நீதிமன்றத்தில் முறையிடலாம் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
வேளாங்கண்ணி: விஜய் தனது மனைவியுடன் சேர மண்டியிட்டு சென்ற ரசிகர்…


