
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் விண்ணில் பாய்ந்தது.

பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் TV- D1 ராக்கெட் மூலம் இன்று (அக்.21) காலை 10.00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து மாதிரி விண்கலம் ஏவப்பட்டு விண்ணில் பாய்ந்தது. 16.6 கி.மீ. தூரம் சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் அமரும் பகுதி தனியாகப் பிரிந்து வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.
பாராசூட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் வங்கக்கடலில் இறக்கி சோதனை நடத்தப்பட்டது. மோசமான வானிலை, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் விண்ணில் பாய்ந்தது. ஒரு வினாடிக்கு 8 மீட்டர் என்ற விகிதத்தில் பாராசூட் தரையிறக்கப்பட்டு கலன் வெற்றிகரமாக இறங்கியது.
‘ககன்யான் சோதனை வெற்றி’- இஸ்ரோ அறிவிப்பு!
இதையடுத்து, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனையோட்டம் வெற்றி பெற்றதை இஸ்ரோ அறிவித்துள்ளது. கடலில் விழுந்த கலன் கப்பல் மூலம் மீட்டு கொண்டு வரப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.