
டெல்லியில் நடந்த தசரா விழாவில் சனாதனத்தை எதிர்ப்பு உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன. ராவணன், கும்பகர்ணன் உருவ பொம்மைகளுடன் சனாதன எதிர்ப்பு வாசகம் கொண்ட உருவப் பொம்மைகளும் எரிக்கப்பட்டுள்ளது. சனாதன தர்மத்திற்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்க வேண்டும் என உருவப் பொம்மையில் குறிப்பிட்டிருந்தது.

தளபதி 68 பட பூஜை வீடியோ வெளியானது
அத்துடன், சனாதனத்துடன் மோதுபவன் தோற்றுப்போவான் என்றும் உருவ பொம்மையில் குறிப்பிட்டு எரிக்கப்பட்டது.
துருவ நட்சத்திரம் படத்தின் முன்னோட்டம் வெளியானது
டெல்லியில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தீமையை நன்மை வெற்றி கொண்டதன் அடையாளமாக தசரா கொண்டாடப்படுகிறது. ராவண உருவப் பொம்மை எரிக்கும் நிகழ்வு என்பது பல உறுதிமொழிகளை எடுத்துக் கொள்ளும் விழா. அடுத்த ஆண்டு ராமநவமி ராமர் கோயிலில் கொண்டாடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.


