spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாலியோ கொண்டாட்டத்தில் விபரீதம்... லோகேஷ் கனகராஜ் படுகாயம்..

லியோ கொண்டாட்டத்தில் விபரீதம்… லோகேஷ் கனகராஜ் படுகாயம்..

-

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிக்ஷின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

இத்திரைப்படம் கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலித்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. நடப்பு வருடத்தில் முதல் நாளிலேயே 140 கோடி வசூலித்த முதல் திரைப்படம் லியோ என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இது மட்டுமன்றி இங்கிலாந்திலும் முதல் நாளில் மட்டும் 5 கோடி ரூபாய் வசூலித்துள்ள லியோ திரைப்படம். இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரசிகர்கள் மட்டுமன்றி லியோ படம் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கேரள மாநிலம் பாலகாட்டில் உள்ள அரோமா திரையரங்கில் ஒளிபரப்பான லியோ திரைப்படக் காட்சியை காண இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக அதிகளவில் கூட்டம் கூடியதால், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இந்த தகவல் சமூகவலைதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காயம் காரணமாக கேரளாவில் லோகேஷ் பங்கேற்க இருந்த இரண்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

MUST READ