ஆவடி மூர்த்தி நகரில் வழிபறி செய்ததாக ஆட்டோ கேஸ் பங்க் ஊழியர் நாடகம் நடத்தியது அம்பலமானது.
சிவகங்கையை சேர்ந்த ராஜா என்பவர் அந்த பங்கில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவர் கலெக்க்ஷன் தொகை 1,54,000 ரூபாய்யை, வங்கியில் டெபாசிட் செய்ய இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் தன்னை இரண்டு பேர் வழிமறித்து செங்கலால் தாக்கி பணத்தைப் பறித்து சென்றதாக அவர், ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி உதவி ஆணையர் புரூசோத்தம்மன், ஆவடி ஆய்வாளர் டில்லிபாபு சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர், சந்தேகத்தின் பெயரில் கார்த்திக் ராஜாவிடம் ஆவடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் நாடகம் ஆடியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

பண தேவைக்காக கார்த்திக் ராஜா தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து இச்சம்பத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து இன்று அதிகாலை செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷனில் வைத்து கார்த்திக் ராஜாவின் நண்பர்கள் தங்கமுத்து, ஆனந்த் ஆகிய இருவரை ஆவடி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 75,000 ரூபாய் பணம் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், ஆவடி போலீசார் அவர்களிடம், தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
