Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ் நிலத்துக்கு ‘ தமிழ்நாடு’ என பெயர் சூட்டியது திமுக- மு.க.ஸ்டாலின்

தமிழ் நிலத்துக்கு ‘ தமிழ்நாடு’ என பெயர் சூட்டியது திமுக- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

சென்னை கோட்டூர்புரத்தில் சென்னை இலக்கியத் திருவிழா 2023-ஐ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 6 மருத்துவப்படிப்பு நூல்களையும் 108 புத்தகங்களையும் அவர் வெளியிட்டார்.

Image

we-r-hiring

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சி என்பது எப்போதும் தமிழ் ஆட்சிக் காலம்தான். ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட வரலாறு கொண்ட தமிழ் நிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியது திமுக. மொழி மானத்தைப் பெற்றாக வேண்டும். மொழி என்பது ஒரு நிலத்தின் உயிர். மொழியை பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது. உணர்வால், அறிவால் வளர்க்க வேண்டும். இளைஞர்களுக்கு தமிழ் மொழி, தமிழ் இலக்கிய உணர்வை ஊட்ட வேண்டும். மொழியை காக்க உயிரை கொடுத்த இனம் தமிழ் இனம்.

இலக்கியம்தான் ஒரு மனிதரை பண்படுத்தும். மத- சாதியவாதத்தால் பிளவுறும்போது ‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’ என்ற திருவள்ளுவரின் ஒரு வரி மனிதனை ஒன்றாக ஆக்கும். இலக்கிய திருவிழா தமி மாநாடு போன்று நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வள்ளுவர் கோட்டமும் , கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையும் காலத்தால் அழியாத சின்னமாக இருக்கும். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வரி மனித சமுதாய வேறுபாடுகளை களைகிறது. தெய்வாத்தால் ஆகாது எனினும் என்ற திருக்குறளைவிட தன்னம்பிக்கை வரி வேறு உண்டா? மொழி என்பது ஒரு இனத்தினுடைய உயிர். இலக்கியம் என்பது ஒரு இனத்தினுடைய இதயம்” எனக் கூறினார்.

 

MUST READ