spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇலங்கைக்கு எதிரான போட்டியில் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி!

இலங்கைக்கு எதிரான போட்டியில் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி!

-

- Advertisement -

 

இலங்கைக்கு எதிரான போட்டியில் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி!
Photo: ICC

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஏழாவது வெற்றியை இந்திய அணி பதிவுச் செய்துள்ளது.

we-r-hiring

சச்சின் டெண்டுல்கரின் சிலை இன்று திறப்பு!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவ.02) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்ற உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்களை எடுத்தது.

இந்திய அணி தரப்பில் சுப்மன் கில் 92 ரன்களையும், விராட் கோலி 88 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் தில்ஷன் மதுஷனகா 5 விக்கெட்டுகளையும், துஷ்மந்தா சமீரா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர், 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி விளையாடி வருகிறது. தொடக்கம் முதலே, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இலங்கை அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

357 ரன்களைக் குவித்தது இந்திய அணி!

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

MUST READ