கர்நாடக சங்கீத மேதை சத்குரு தியாகராஜர் திருவாரூரில் பிறந்தவர். ராமன் மீது கொண்ட அதீத பக்தியால் திருவையாறுக்கு வந்த தியாகராஜர், ராமனை நினைத்து உள்ளம் உருகி 24 ஆயிரம் கீர்த்தனைகளை இயற்றி பாடினார்.


வயது மூப்பு காரணத்தில் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்த தியாகராஜருக்கு, காவிரி கரையில் கோயில் எழுப்பி இசைக்கலைஞர்கள் வணங்கிவருகின்றனர். ஆண்டு தோறும் 5 நாட்கள் ஆராதனை விழா எடுத்து வழிபடுவது வழக்கம். அப்போது தியாகராஜர் இயற்றிய கீர்த்தனைகளை இசைத்து பாடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சத்குருவின் 176-வது ஆண்டு ஆராதனை விழா இன்று தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 6 நாள் ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அனைத்து இசைக் கலைஞர்களும் சேர்ந்திசைக்கும் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளைகள் இசைக்கும் நிகழ்ச்சி 11 ம் தேதி நடைபெற உள்ளது . இதில் தெலுங்கானா ஆளுநரும், தமிழக ஆளுநரும் பங்கேற்க உள்ளார்.
அனைத்து இசைக் கலைஞர்களும் சேர்ந்து இசைத்து அஞ்சலி செலுத்தும் “பஞ்ச ரத்ன” கீர்த்தனைகள் இசைக்கும் நிகழ்ச்சி 11-ம் தேதி நடைபெறுவதையொட்டி,
11 ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
