spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஜோதிமணி பணம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளது?"- அண்ணாமலை பகீர் பேட்டி!

“ஜோதிமணி பணம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளது?”- அண்ணாமலை பகீர் பேட்டி!

-

- Advertisement -

 

"ஜோதிமணி பணம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளது?"- அண்ணாமலை பகீர் பேட்டி!
Video Crop Image

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “பெரியார் சிலையை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு உரிய கவுரவத்துடன் நாங்கள் வைப்போம். பெரியாரின் கருத்துகள் பொது இடத்தில் இருக்கலாம்; ஆனால் கோயில் அருகே இருக்கக் கூடாது. ஸ்ரீரங்கம் கோயில் முன் உள்ள பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்பதே பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி.

we-r-hiring

“கூட்டுறவு ஊழியர்களுக்கு 20% போனஸ் தருக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அதிகரித்துவிட்டது. அறநிலையத்துறை இருக்கக் கூடாது என்பதை பா.ஜ.க. செயல்படுத்தும். ரூபாய் 5,344 கோடி மதிப்பிலான கோயில் சொத்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார். கொக்கு போல 2026- ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.க. காத்திருக்கிறது. கர்நாடகா துணை முதலமைச்சர் சிவக்குமாரிடம் ஜோதிமணி பணம் பெற்றதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

‘ஆம்னி பேருந்து கட்டண உயர்வு’- தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கேள்வி!

ஜோதிமணி வழக்கு தொடர்ந்தால் என்னிடம் உள்ள ஆதாரத்தைச் சமர்ப்பிக்க தயார்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ