spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஓமனில் கடத்தப்பட்ட தமிழரை மீட்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஓமனில் கடத்தப்பட்ட தமிழரை மீட்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

"அண்ணன் அழகிரி திருமணத்தில் பெரியாருக்கு நான்தான் உணவுப் பரிமாறினேன்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: DMK

ஓமனில் கடத்தப்பட்ட தமிழக மீனவரை மீட்டு தாயகம் கொண்டு வர நடவடிக்கைக்கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

we-r-hiring

நடிகர் சங்கம் செய்தது மிகப்பெரிய தவறு – மன்சூர் அலிகான் காட்டம்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஓமன் நாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் பெத்தாலி என்பவரை மீட்டுக் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று (நவ21) கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகத்தில் உள்ள NOOH 1012 மற்றும் YAYA 1184, அல்ரெடா (ஓமானியன்) ஆகிய மீன்பிடிப் படகுகளில் வேலை செய்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவில், பெத்தாலிஸ் என்பவரும் பணிபுரிந்து வந்ததாகவும், அந்த மீன்பிடிப் படகுகளில் பணிபுரிந்து வந்த 18 மீனவர்களின் சம்பளத்தை உரிமையாளர் தராததால் உரிமையாளருக்கும். மீனவர்களுக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்த நிலையில் பெத்தாலியை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளதாகவும், அவரை உடனடியாகக் கண்டுபிடித்து. இந்தியாவுக்கு திருப்பி கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு பெத்தாலியின் மனைவி ஷோபா ராணி கோரிக்கை விடுத்துள்ளதை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழா – விஜய், அஜித்துக்கும் அழைப்பு

இந்த நிலையில் ஓமன் நாட்டிலுள்ள, இந்தியத் தூதரகம் மூலம் பெத்தாலியை மீட்டு தாயகம் கொண்டு வர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரைக் கேட்டுக் கொண்டுள்ளார்”. இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ