Homeசெய்திகள்தமிழ்நாடுபத்திரப்பதிவு- இன்று கூடுதல் டோக்கன்கள்!

பத்திரப்பதிவு- இன்று கூடுதல் டோக்கன்கள்!

-

- Advertisement -

 

TN Govt - தமிழக அரசு

தமிழகத்தில் இன்று (நவ.23) சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப் பதிவுக்காகக் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். சுபமுகூர்த்தநாளையொட்டி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டகங்களை இரும்பு கம்பியால் அடித்து துன்புறுத்தும் வீடியோ வெளியானது!

இது தொடர்பாக பத்திரப்பதிவுத்துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுபமுகூர்த்தத் தினமான இன்று (நவ.23) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு சார் பதிவாளர் அலுவலகங்களில் 100- க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200- க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி- 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

மேலும், அதிகளவு ஆவணப் பதிவு நடைபெறும் அலுவலகங்களில் 100- க்கு பதிலாக 150 டோக்கன்களுடன் வழக்கமாக வழங்கப்படும், 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக, 4 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பத்திரப்பதிவுத்துறைச் செயலாளர் கூறியுள்ளார்.

MUST READ