2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில், தமிழ்நாடு, திராவிட மாடல், சமூக நீதி அரசுக்கு மனபூர்வமான பாராட்டு என்று ஆளுநர் உரை புத்தகத்தில் இருந்ததை தவிர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கத்திற்கு மாறாக புதிய சில கருத்துகளை சேர்த்து பேசினார்.

அரசின் செயல்படுகளை தெரிவித்து, தமிழ்நாடு அரசுக்கு எனது மனப்பூர்வமான பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் என்று இடம் பெற்ற வாசகம் ஆளுநர் உரை நிகழ்த்தும் இல்லை. இவ்வாறு, தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருப்பதற்கு முதலமைச்சரும், சமூக நீதியும் திராவிட மாடல்தான் காரணம் என்பதை ஆளுநர் உரையில் தவிர்த்து உள்ளார். தமிழை அலுவல் மொழியாக கொண்டு வருவதற்கு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை ஆளுநர் தவிர்த்து இருக்கிறார்.

இதேபோல், 47வது பக்கத்தில் 64வது அம்சமாக குறிப்பிடப்பட்டு இருந்த பத்தியின் இறுதியில் “சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்கிறது” என்ற அம்சங்களை படிப்பதை தவிர்த்தார். மேலும், 65வது அம்சமாக சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், மதநல்லிணக்கம் உள்ளிட்ட வார்த்தைகளையும், பெரியார்,அம்பேத்கார் உள்ளிட்டோரின் பெயர்கள் அடங்கிய முழு பத்தியையும் வாசிப்பதை தவிர்த்து 66வது அம்சத்தை வாசிக்க தொடங்கி உரையை முடித்துள்ளார்.
