தமிழ்நாடு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவருமே அருகருகே அமர்ந்து ஆளுநர் உரை நிகழ்வில் பங்கேற்றனர்.


அதிமுகவில் உட்கட்சி மோதல் முடிவிற்கு வரவில்லை. அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. நாளையோடு விசாரணை முடிய வாய்ப்பு உள்ளதால் வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இ.பி.எஸ் தரப்பில் ஆர்.பி.உதயகுமார் தான் எதிர்கட்சித்துணைத்தலைவர் என்றும், அவருக்கு இருக்கை மாற்றித்தர வேண்டும் எனவும் சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில் இதில் முடிவு எடுக்க கூடாது என்று ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து தமிழ்நாடு சட்டசபையில் கடந்த கூட்டத்தொடரிலும், இன்று தொடங்கிய கூட்டத்தொடரிலும் இருக்கைகள் மாற்றப்படவில்லை. ஆளுநர் உரையின் போது அமளியில் ஈடுபடாமல் எடப்பாடி அமைதியாக ஓ. பன்னீர்செல்வம் அருகே அமர்ந்து இருந்தார். இருவரும் அருகருகே அமர்ந்தபடி ஆளுநர் உரையை கவனித்துக் கொண்டு இருந்தனர். இருப்பினும், இருவரும் பார்த்துக்கொள்ளாமல் இறுக்கமாக இருப்பதை காண முடிந்தது.
