spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

“8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

- Advertisement -

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

தமிழகத்தில் இன்று (நவ.23) 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது!

வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (நவ.23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை (நவ.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

“எக்ஸ் தளத்தில் கணக்கு இல்லை”- சாரா டெண்டுல்கர் விளக்கம்!

வரும் நவம்பர் 25- ஆம் தேதி அன்று தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ