
ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.27) தரிசனம் மேற்கொண்டார்.
வேறு எந்த நடிகையும் இது போன்ற மோசமான அனுபவத்தை சந்திக்கக் கூடாது….. மனிஷா யாதவ் வேதனை!
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (நவ.26) தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திருப்பதிக்கு சென்றார். ரேணிகுண்டா விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமரை ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வரவேற்றார்.
பின்னர், சாலை மார்க்கமாக திருமலைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். இந்த நிலையில், இன்று (நவ.27) பிரதமர் நரேந்திர மோடி, திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். அவரை தேவஸ்தான நிர்வாகிகள் வரவேற்றனர்.
விஷால் 34 படத்தின் முக்கிய அறிவிப்பு!
இதையடுத்து, ஏழுமலையானை பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்தார். இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 140 கோடி இந்தியர்களின் நல்வாழ்வுக்கு பிரார்த்தனை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.