Homeசெய்திகள்இந்தியாமண்ணில் புதையும் நகரம்! உத்திராகண்ட்டில் பரபரப்பு

மண்ணில் புதையும் நகரம்! உத்திராகண்ட்டில் பரபரப்பு

-

- Advertisement -

உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமட் நகரம் மண்ணில் புதைந்துவருகிறது. மேலும் 68 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.

home

we-r-hiring

உத்திராகண்ட் மாநிலம் இமயமலை தொடரில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக வீடுகள், சாலைகள், மலைகளில் நிலவெடிப்பு மற்றும் வேடுகளில் விரிசல் எற்பட்டு வருகிறது. ஜோஷிமத் நகரம் மண்ணுக்குள் புதைகிறது என்ற அச்சத்தில் மக்கள் உள்ள நிலையில் ஐஐடி குழு ஆய்வு செய்து வருகிறது.

கடந்த ஞாயிறு நிலவரப்படி ஜோஷிமத் நகரில் 610 கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 68 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல் வீடுகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இதுவரை 81 குடும்பங்கள் ஜோஷிமத் நகரை காலிசெய்துவிட்டு சென்றதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக விரிசல் ஏற்பட்டுள்ள 68 வீடுகள், வசிக்க தகுதியற்ற கட்டிடங்களாக அறிவிக்கபட்டுள்ளது.

MUST READ