
ஆவடியில் பகுதியில் பொழிந்த கனமழையால் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதி தீவுப் போல காட்சியளித்தது. அங்கு வசிக்கும் நிவேதா என்பவருக்கு பிறந்து 20 நாட்களே ஆன கைக்குழந்தை இருக்கும் நிலையில், அவரது குடும்பத்தினரை ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் பத்திரமாக மீட்டு, அவர்களது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

விஜயகாந்த் உடல்நிலை அறிந்து கவலையடைந்தேன் – ராகுல் காந்தி..
கனமழையால் கால்வாய்கள் நிரம்பி, மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலைகளில் ஆறுபோல் மழைநீர் பெருக்கெடுத்தது. அதேபோல், ஆவடியில் பெய்த கனமழையால் காவல் நிலையத்தில் மழைநீர் புகுந்தது. காவல் நிலையத்தில் வரவேற்பு அறை, கைதிகளின் சிறை என அனைத்து அறைகளிலும் மழைநீர் புகுந்தது. காவல் நிலையத்தைச் சுற்றிலும் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதால், பாதுகாப்புக் கருதி காவல் நிலையம் பூட்டப்பட்டது.
மற்றொரு புறம் மழைநீரை அகற்றும் பணி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டு மழைக்கும், இதே நிலை நீடிப்பதாக காவலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதேபோல், ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்திலும் மழைநீர் இடுப்பளவுத் தேங்கியது. இதனால் தீயணைப்பு வாகனத்தை சாலையிலேயே நிறுத்தி வைத்தனர்.
சென்னை மற்றும் புறநகரில் வெளுத்து வாங்கும் கனமழை!
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக, முக்கிய சாலைகள் வெள்ளக் காடாக மாறிய நிலையில், ஒவ்வொரு மழைக்கும் கடுமையாகப் பாதிக்கப்படும், ஆவடி, பூந்தமல்லி சாலையில் வெள்ளப் பாதிப்பின்றி போக்குவரத்து சீராக இருந்தது.


