
தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவுத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 07.00 மணிக்கு வாக்குப்பதிவுத் தொடங்கிய நிலையில், மாலை 06.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதிகாலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து, வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றன.

சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!
தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 35,655 வாக்குச்சாவடிகளில் 27,000 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் 1 கோடியே 58 லட்சத்து 71 ஆயிரம் ஆண் வாக்காளர்களும், 1 கோடியே 58 லட்சத்து 43 ஆயிரம் பெண் வாக்காளர்களும் வாக்குப்பதிவுச் செய்யத் தகுதியுடையோராக உள்ளனர். இதேபோல், மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கை 2,557 ஆக உள்ளது. இந்த தேர்தலில், 2,290 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி மையங்களில் மாநில காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் என 70,000- க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் மாதம் 3- ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.