Homeசெய்திகள்தமிழ்நாடுகனியாமூர் தனியார் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடக்கம்

கனியாமூர் தனியார் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடக்கம்

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ஆம் தேதி அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் ஜூலை 17ஆம் தேதி அன்று கலவரமாக மாறியது.

kallakurichi school

we-r-hiring

இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகம் முழுவதும் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்ந நிலையில் இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 05-ம் தேதியன்று 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் மனு அளித்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி வழங்கிய நிலையில் இன்று முதல் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சுமார் 181 நாட்களுக்கு பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கி நிலையில் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் தங்களது பெற்றோர்களுடனும்,பள்ளி பேருந்திலும் பள்ளிக்கு வந்தனர்.தொடர்ந்து இறைவணக்கம் கூட்டம் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், “ஆன்லைன் வகுப்புகளில் கல்வி பயில்வதில் பல்வேறு கஷ்டங்கள் இருந்து வந்த நிலையில் தற்போது 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. LKG முதல் 4-ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கும் நேரடியாக வகுப்புகளை தொடங்க முதல்வர் அனுமதி அளிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.

MUST READ