Homeசெய்திகள்தமிழ்நாடுசுங்கச்சாவடிகளே இல்லாத ஊர் கேரளா- அமைச்சர் கே.என்.நேரு

சுங்கச்சாவடிகளே இல்லாத ஊர் கேரளா- அமைச்சர் கே.என்.நேரு

-

- Advertisement -

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவைச் சேர்ந்த மக்கள், கட்டுப்பாட்டோடு இருந்து இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்குபவர்கள் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

kn nehru assembly

we-r-hiring

சென்னையில் உள்ள மலையாளி சங்கத்தின் 125-வது ஆண்டு தொடக்க விழா, சேத்துப்பட்டில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகர மேயர் பிரியா மற்றும் மலையாள நடிகர் ஜெயசூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய தயாநிதி மாறன், மலையாளிகள் தவிர யாருமே சேர முடியாமல் இருந்த மலையாளிகள் சங்கத்தில் அனைவரும் உறுப்பினராகலாம் என அறிவித்திருப்பதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் கேரள சாப்பாடு தமக்கு மிகவும் பிடிக்கும் என அவர் தெரிவித்தார். பின்னர் பேசிய அமைச்சர் சேகர்பாபு, மலையாளிகள் கிளப்பில் அனைவரும் உறுப்பினராக வாய்ப்பு ஏற்படுத்தியமைதான் திராவிடம் மாடல் ஆட்சிக்கான சான்று என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “மலையாளிகள் சங்கத்தை 125 ஆண்டுகளாக சென்னையில் சிறப்புடன் நடத்தியது மிகப்பெரிய ஆச்சரியம். இன்னும் பல ஆண்டு காலம் தொடர்ந்து சங்கம் வாழ்வதற்கு வாழ்த்துக்கள். கடவுளின் தேசம் எனப் போற்றப்படும் கேரளாவின் மக்கள், குறித்த நேரத்தில் வேலை செய்யும் கட்டுப்பாடு மிக்கவர்கள். குறைந்த செலவில் வாழ்க்கையை சிறப்பாக கேரள மக்கள் நடத்துவர். சுங்கச்சாவடிகளே இல்லாத ஊர் கேரளா. 10 ஆண்டுகள் எம்ஜிஆரை முதலமைச்சராக ஏற்றுக்கொண்ட நாடு தமிழ்நாடு. அனைத்து மாநில மக்களையும் மலையாளிகள் சங்கத்தின் உறுப்பினர்களாக முழுமையாக ஏற்றுக் கொள்வதான அறிவிப்பை வெளியிட்டிருப்பதன் மூலம் மலையாளிகளை முழுமையாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு உள்ளார்கள்” எனக் கூறினார்.

MUST READ